َلِكُلٍّ وِّجْهَةٌ هُوَ مُوَلِّيْهَا فَاسْتَبِقُوا الْخَيْرٰتِؔ اَيْنَ مَا تَكُوْنُوْا يَاْتِ بِكُمُ اللّٰهُ جَمِيْعًا اِنَّ اللّٰهَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
(நம்பிக்கையாளர்களே!) ஒவ்வொரு (கூட்டத்த)வருக்கும் ஒரு திசையுண்டு. அவ(ரவ)ர் அதன் பக்கம் முன்னோக்குவார். (திசை மட்டும் நோக்கமல்ல) நன்மையானவற்றை செய்வதில் நீங்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.
(அல்குர்ஆன் : 2:148)
கைரிகள் பேரவை
பேரவையின் நோக்கம்....
- கைரிகள் எந்த இயக்கத்தையும் சாராமல் மார்க்கம்,பொருளாதாரம், சமூக நல்லிணக்கப் பணிகள் மற்றும் ஆன்மீகத்தில் தன்னையும் தன்னைச் சார்ந்த சமூகத்தையும் வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்வது.
எதிர் காலத் திட்டங்கள்....
- பேரவையின் கீழ் ஓர் கல்வி நிறுவனத்தை ஏற்படுத்துதல்.
- அதன் மூலம் ஆரம்பக் கல்வி முதல் ஐஐடி வரை மார்க்கக் கல்வியுடன் மாணவர்களை அறிவு, ஒழுக்கம் மற்றும் ஆளுமையுடன் உருவாக்குதல்.
- மாமறையை மழலையர்கள் மற்றும் மங்கையர்களின் மனதில் பதிய வைத்து மறுமையில் வெற்றி பெறச் செய்தல்.
- மதம் மொழி இனம் பாராமல் சமய நல்லிணக்கத்துடன் அனைவருக்கும் சேவை செய்தல்.
- நவீன பிரச்சினைகளுக்கு தீர்வு காண உலமாக்கள் தங்களது ஆளுமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் அவ்வபோது ஆய்வு மற்றும் பயிலரங்கங்கள் நடத்துதல்.
- ஆண்டுதோறும் கைரிகளில் பத்தாண்டுகள் நிறைவாக தீன் பணி செய்தவர்களை கவுரவித்தல்.
- வீரசோழனில் இயங்கி வரும் ஜாமிஆவின் வளர்ச்சிக்காக அயராது பாடுபடுதல்.
- சிறுசேமிப்பின் மூலம் கைரிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.
கைர்களின் வளர்ச்சியே!..
கைரிகளின் வளர்ச்சி!...